search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடியில் மழை"

    நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் பெய்த மழை நேற்று முதல் இன்று காலை வரை எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யாவிட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் குறைந்த அளவு வந்து கொண்டு இருக்கிறது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கனஅடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.02 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 457 கனஅடி தண்ணீர் வருகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 97.60 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.

    ×